வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் தூய்மையான பொருளாதார முதலீட்டாளர் மன்றத் தொடக்க விழாவில் இந்தியா பங்கேற்பு

Posted On: 06 JUN 2024 3:12PM by PIB Chennai

நீடித்த உள்கட்டமைப்பு, பருவநிலை தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடுகளை திரட்டுவதற்காக, முன்னேற்றத்திற்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் தூய்மையான பொருளாதார முதலீட்டாளர் மன்றத்தின் தொடக்க விழாவில் மத்திய வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தோ-பசிபிக் மண்டலத்தின் முன்னணி முதலீட்டாளர்கள், தூய்மையான பொருளாதார நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் இந்த மன்றத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 10 இந்திய நிறுவனங்கள் உட்பட 100 பருவநிலை தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை 25-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பெற்றன.

இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் (ஐபிஇஎஃப்) தூய்மையான பொருளாதார முதலீட்டாளர் மன்றத்தின் தொடக்க விழாவில் பேசிய வர்த்தகத்துறைச் செயலாளர் திரு பர்த்வால், உலகளாவிய முதலீட்டாளர்கள், திட்ட ஆதரவாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் போன்றோரை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் ஒரு தனித்துவமான தளம் இது என்றும், இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நீடித்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கருவியாக இருக்கும் என்றும் கூறினார்.
ஐபிஇஎஃப்-பின் கீழ் முதலீட்டாளர் மன்றத்தில் உரையாற்றிய திரு பர்த்வால், 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனம் உள்ளிட்ட தூய்மையான எரிசக்தி மதிப்பு சங்கிலியில் இந்தியா 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை சுட்டிக்காட்டினார். கடந்த பத்தாண்டுகளில் வர்த்தகச் சூழலை மேம்படுத்த இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது குறித்த முக்கிய சீர்திருத்தங்களையும் திரு பர்த்வால் எடுத்துரைத்தார்.

இரண்டு நாள் நிகழ்வின் போது, நிதி நிறுவனங்கள், பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள், மூலதன நிதியங்கள், திட்ட உரிமையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஐபிஇஎஃப் கூட்டமைப்பு, அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் நிலையான உள்கட்டமைப்பு மற்றும் பருவநிலை தொழில்நுட்ப ஈடுபாட்டு தடங்களின் கீழ் தீவிரமாக பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2023122

***

AD/PKV/AG/RR



(Release ID: 2023202) Visitor Counter : 52