நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

மத்திய அமைச்சரவை ஆலோசனையை ஏற்று 17-வது மக்களவையைக் கலைப்பதற்கு குடியரசுத்தலைவர் உத்தரவு பிறப்பித்தார்

Posted On: 05 JUN 2024 5:49PM by PIB Chennai

05.06.2024 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், 17-வது மக்களவையை உடனடியாக கலைக்குமாறு குடியரசுத்தலைவருக்கு ஆலோசனை வழங்கியது.

 

அமைச்சரவையின் ஆலோசனையை 05.06.2024 அன்று ஏற்றுக் கொண்ட குடியரசுத்தலைவர், அரசியல் சட்டத்தின் 85-வது பிரிவின் 2(பி) அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 17-வது மக்களவையைக் கலைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.

 

*****

AD/SMB/KPG/DL



(Release ID: 2022941) Visitor Counter : 32