கலாசாரத்துறை அமைச்சகம்
“சத்ரபதி சிவாஜி மகராஜின் 350-வது ஆண்டு முடிசூட்டும் விழா” குறித்தக் கண்காட்சிக்கு தேசிய நவீனக் கலைக்கூடம் ஏற்பாடு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
05 JUN 2024 6:39PM by PIB Chennai
“சத்ரபதி சிவாஜி மகராஜின் 350-வது ஆண்டு முடிசூட்டும் விழா” குறித்தக் கண்காட்சிக்கு தேசிய நவீனக் கலைக்கூடம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கண்காட்சி புதுதில்லியில் உள்ள ஜெய்பூர் இல்லத்தில் நாளை (06.06.2024) மாலை 5.30 மணிக்கு தொடங்கும்.
கண்காட்சி தொடக்கத்தில் இளம் சிவாஜி தமது தந்தையான ஷாஜியிடமிருந்து காவிக்கொடியைப் பெறுகின்ற காட்சி சித்திரிக்கப்படும். இது சுதந்திரமான மராத்தா ராஜ்யத்தின் கனவு பிறந்ததை அடையாளபூர்வமாகக் குறிக்கிறது. இதைத் தொடர்ந்து பிரமாண்டமான ராணுவ மற்றும் கடற்படை நிகழ்வுகள் இடம் பெறும். இதன் பின்னணியில் சிவாஜியின் வெற்றிகளை எதிரொலிக்கும் நிரந்தர பின்புல திரைச்சீலையாக ராய்கட் கோட்டை இடம் பெற்றிருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2022917
***
AD/SMB/KPG/DL
(रिलीज़ आईडी: 2022939)
आगंतुक पटल : 120