நிதி அமைச்சகம்
ஹரியானாவின் ரோத்தக்கில் மத்திய நேர்முக வரிகள் வாரியத்தலைவர் ஜிஎஸ்டி பவனைத் திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
05 JUN 2024 5:40PM by PIB Chennai
ஹரியானாவின் ரோத்தக்கில் மத்திய நேர்முக வரிகள் வாரியத்தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால் ஜிஎஸ்டி பவனை இன்று (05.06.2024) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய திரு அகர்வால், ஒதுக்கப்பட்ட நிதி அளவுக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து திருப்தி தெரிவித்தார். எதிர்காலத்தில் பணியிடத் தேவையைப் பூர்த்தி செய்வதை இது உறுதிப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்வில் பேசிய மத்திய நேர்முக வரிகள் வாரிய உறுப்பினர் திரு சஷாங்க் பிரியா, இந்தப் புதிய கட்டடம் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றும் இதனால் பணிச் செயல்பாடு அதிகரிக்கும் என்றும் கூறினார். வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், எளிதாக இணக்கத்தை உருவாக்குவதற்கு கூடுதலான மற்றும் நவீன வசதிகளை நாம் செய்ய வேண்டியது அவசியமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
----
AD/SMB/KPG/DL
(रिलीज़ आईडी: 2022938)
आगंतुक पटल : 93