பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய மாணவர் படையின் 2 நாள் ‘வருடாந்தர கொள்கை கலந்துரையாடல் முகாம்’ புதுதில்லியில் நடைபெற்றது
Posted On:
05 JUN 2024 2:35PM by PIB Chennai
தேசிய மாணவர் படையின் 2 நாள் ‘வருடாந்தர கொள்கை கலந்துரையாடல் முகாம்’ நேற்றும் இன்றும் (ஜூன் 04-05, 2024) புதுதில்லியில் நடைபெற்றது. இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்ற அரசு வழிகாட்டுதல்படி தேசிய மாணவர் படையை விரிவுப்படுத்தும் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வது இந்த முகாமின் முதன்மை நோக்கமாகும். தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங் இந்த முகாமைத் தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் உள்ள தேசிய மாணவர் படையின் இயக்ககங்களைப் பிரதிநிதித்துவம் செய்து கூடுதல் தலைமை இயக்குநர்களும் துணைத்தலைமை இயக்குநர்களும், இதில் கலந்து கொண்டனர்.
தேசிய மாணவர் படையின் பயிற்சி, அடிப்படைக் கட்டமைப்பு போன்றவற்றை விரிவுபடுத்த கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட நீடித்த முயற்சிகளை தலைமை இயக்குநர் இந்தக் கூட்டத்தில் எடுத்துரைத்தார். 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக நாட்டை உருவாக்குவதை நோக்கிய அரசின் முடிவுகளுடன் ஒருங்கிணைவதில் இளம் இந்தியர்களின் நோக்கத்திற்கும் அவர்களைப் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதற்கும் தேசிய மாணவர் படை கொண்டுள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
--
(Release ID: 2022818)
AD/SMB/KPG/RR
(Release ID: 2022842)
Visitor Counter : 107