பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

தில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரச மரக்கன்றை நட்டார்

प्रविष्टि तिथि: 05 JUN 2024 2:21PM by PIB Chennai

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி "தாயின் பெயரில் ஒரு மரம்" என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். தில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றை திரு மோடி நட்டார். நமது புவியின் நலனுக்காக அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா பல கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு, நாடு முழுவதும் வனப்பகுதியை அதிகரிக்க வழிவகுத்தது என்று தெரிவித்தார். நீடித்த வளர்ச்சியை நோக்கிய நமது முயற்சிக்கு இது மிகப்பெரியது என்று திரு மோடி மேலும் கூறினார்

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, "தாயின் பெயரில் ஒரு மரம்" ஒரு இயக்கத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் தாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் எதிர்காலங்களில் மரக்கன்றை நடுமாறு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள அனைவரையும்  நான் கேட்டுகொள்கிறேன். நீங்கள் அவ்வாறு ஈடுபட்டதன் குறித்த படத்தை #Plant4Mother –ல் பகிரவும்.

இன்று காலை, இயற்கை அன்னையைப் பாதுகாப்பதற்கும் நீடித்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதற்கும் நமது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப நான் ஒரு மரக்கன்றை நட்டேன். நமது புவியின் நலனுக்காக அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். #Plant4Mother"

"கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா பல கூட்டு முயற்சிகளை மேற்கொண்டதன் மூலம், நாடு முழுவதும் வனப்பகுதியை அதிகரிக்க வழிவகுத்தது என்பது உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கும். நீடித்த வளர்ச்சியை நோக்கிய நமது முயற்சிக்கு இது சிறப்பானதாகும். உள்ளூர் மக்கள்தில் பங்கேற்று  வழிநடத்தியது பாராட்டத்தக்கது.

***

(Release ID: 2022815)

SRI/IR/AG/RR


(रिलीज़ आईडी: 2022827) आगंतुक पटल : 294
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Telugu , Kannada , Khasi , English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Malayalam