கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தானியக் கையிருப்புத் திட்டத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 03 JUN 2024 5:30PM by PIB Chennai

உலகின் மிகப் பெரிய தானியக் கையிருப்புத் திட்டத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (03.06.2024) புதுதில்லியில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் மத்திய கூட்டுறவு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், உணவுப்பதன தொழில்கள் துறை ஆகியவற்றின் செயலாளர்கள், இந்திய உணவுக்கழகம் மற்றும் நபார்டு வங்கியின் அதிகாரிகளுடன் முதலாவது கூட்டத்தை நடத்தினர்.

கடந்த ஆண்டு 11 மாநிலங்களில் தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டத்தில் அமலாக்க நிலை குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய கூட்டுறவு அமைச்சக செயலாளர் டாக்டர் ஆசிஷ் குமார் பூட்டானி, இந்த முன்னோடித் திட்டத்தை நாடு முழுவதும் பரவலாக்க உணவுக் கிடங்குகளை உருவாக்கும் முயற்சி பற்றி எடுத்துரைத்தார்.

 இந்தத் திட்டம் மாநில அரசுகள்,  இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு, தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழகம் ஆகியவற்றின்  உதவியுடன் கூடுதலாக 500 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2022622

***

AD/SMB/KPG/DL­


(रिलीज़ आईडी: 2022661) आगंतुक पटल : 130
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Telugu