புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2023-24 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகள் மற்றும் 2023-24 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காலாண்டு மதிப்பீடுகள்

Posted On: 31 MAY 2024 5:30PM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2023-24 நிதியாண்டிற்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகள் மற்றும் 2023-24 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான (ஜனவரி-மார்ச்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காலாண்டு மதிப்பீடுகள் மற்றும் அதன் செலவின கூறுகளுடன் நிலையான (2011-12) மற்றும் தற்போதைய விலைகள் இரண்டையும் வெளியிட்டுள்ளது. ஆண்டு சதவீத மாற்றங்களுடன், பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில், மொத்த மதிப்பு கூட்டப்பட்ட மதிப்பீட்டின் ஆண்டு மற்றும் காலாண்டு மதிப்பீடுகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் செலவினக் கூறுகள் மற்றும் 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான நிலையான மற்றும் நடப்பு விலைகளில் மொத்த / நிகர தேசிய வருமானம் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் வருடாந்திர மதிப்பீடுகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
 
முக்கிய சிறப்பம்சங்கள்:
•    2022-23 நிதியாண்டின் 7.0% வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது 2023-24 நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2% வளரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022-23 நிதியாண்டின் 14.2% வளர்ச்சி விகிதத்தை விட  2023-24 நிதியாண்டில் 9.6% வளர்ச்சி விகிதத்தைக் கண்டுள்ளது.
•    உண்மையான மொத்த மதிப்பு கூட்டல் 2023-24 இல் 7.2% வளர்ந்துள்ளது, இது 2022-23 இல் 6.7% ஆக இருந்தது. 
•    உண்மையான மொத்த மதிப்பு கூட்டல் மற்றும் உண்மையான  மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் முறையே 6.3% மற்றும் 7.8% வளரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான  மொத்த மதிப்பு கூட்டல் மற்றும்  மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 8.0% மற்றும் 9.9% என மதிப்பிடப்பட்டுள்ளன.

***************

ANU/PKV/BR/KV



(Release ID: 2022421) Visitor Counter : 80