அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உயிரி தொழில்நுட்பத் துறையின் ஆய்வுக் கவுன்சில் தடுப்பூசியியல் தொடர்பான மேம்பட்ட படிப்பை நடத்துகிறது
Posted On:
28 MAY 2024 4:14PM by PIB Chennai
மத்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோடெக்னாலஜி ரிசர்ச் அண்ட் இன்னோவேஷன் கவுன்சில் தடுப்பூசியியல் தொடர்பான 2-வது பாடத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
மே 27-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்த 6 நாள் பாடத் திட்டம் நடைபெறுகிறது. இதில் தடுப்பூசிகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கல் தொடர்பான விரிவான கண்ணோட்டங்கள் இடம்பெறுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் தயார்நிலை கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணியின் (CEPI) ஆதரவுடன் இந்தப் பாடத்திட்டத்தில், நேபாளம், இலங்கை, கேமரூன், கானா, நைஜீரியா, தான்சானியா, கென்யா, எகிப்து மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 இளம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர்.
************
PLM/RR
(Release ID: 2021937)
(Release ID: 2022042)
Visitor Counter : 43