சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தின் போது, கூகுள் நிறுவனத்தின் தலைமை சுகாதார அதிகாரியுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சந்திப்பு

Posted On: 28 MAY 2024 8:09PM by PIB Chennai

ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 77-வது உலக சுகாதாரப் பேரவை கூட்டத்திற்கிடையே, கூகுள் நிறுவனத்தின் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் கரேன் டி சால்வோவை இந்திய தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு அபூர்வா சந்திரா சந்தித்தார். டிஜிட்டல் சுகாதார கருவிகளை மக்களுக்கு மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் கூகுள் ஆராய்ச்சி மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் இடையே நடந்து வரும் செயல்பாடுகள் பற்றி விவாதிப்பதே இந்தச் சந்திப்பின் நோக்கமாகும்.

தொடக்கத்தில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் இரு அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் செயல்பாட்டைப் பாராட்டினார். செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்திய அவர், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்துக்கு  கூகுளின் ஆதரவை நாடினார். தானியங்கி விழித்திரை நோய் மதிப்பீடு (ஏஆர்டிஏ) போன்றவற்றுக்கு டிஜிட்டல் சுகாதாரக் கருவிகளை உருவாக்கி அவற்றை ஆயுஷ்மான் பாரத் இயக்கத்திற்கு செயல்படுத்த வேண்டும் என்றும், மாணவர் சமூகம் மற்றும் ஸ்டார்ட்அப் சமூகத்தினரிடையே இது பற்றிய விழிப்புணர்வை பரப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ஹெகாலி ஜிமோமி, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், தேசிய சுகாதார இயக்கத்தின்  இயக்குநருமான திருமதி ஆராதனா பட்நாயக், தேசிய சுகாதார ஆணையத்தின் கூடுதல் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பசந்த் கார்க் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

************

(Release ID: 2022004)

SRI/PKV/AG/RR


(Release ID: 2022029) Visitor Counter : 58