பாதுகாப்பு அமைச்சகம்
லடாக் பிராந்தியத்தில் உள்ள காங் யாட்சே-2 மலையில் சிறுவர், சிறுமியர் மலையேறும் பயணத்தை தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Posted On:
28 MAY 2024 5:17PM by PIB Chennai
தேசிய மாணவர் படையைச் சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமியர் மவுண்ட் காங் யாட்சே -II சிகரத்திற்கு மலையேறும் பயணத்தை மே 28, 2024 அன்று புதுதில்லியில் இருந்து தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த சிகரம் லடாக் பிராந்தியத்தில் 6,250 மீ / 20,505 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது 1970 முதல் 87வது தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்களின் மலையேறும் பயணமாகும்.
இந்தக் குழுவில் ஐந்து அதிகாரிகள், 17 நிரந்தரப் பயிற்றுநர்கள், பல்வேறு என்.சி.சி இயக்குநரகங்களைச் சேர்ந்த 24 மாணவர்கள் (12 சிறுவர்கள், 12 சிறுமிகள்) உள்ளனர். இந்தக் குழு ஜூன் 2024 இறுதிக்குள் மவுண்ட் காங் யாட்சே-II ஐ அடைய முயற்சிக்கும்.
தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர், குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இளைஞர் மேம்பாட்டில் தேசிய மாணவர் படையின் முக்கியப் பங்கையும், பல்வேறு சாகச நடவடிக்கைகளில் ஈடுபட மாணவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார். பயணத்தின் சவால்களை நிதானம், தைரியம், தொழில்முறை மற்றும் வெல்ல முடியாத உணர்வுடன் எதிர்கொள்ள மாணவர்களை அவர் ஊக்கப்படுத்தினார்.
************
SRI/SMB/AG/DL
(Release ID: 2021995)
Visitor Counter : 86