பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
காம்பியாவின் இடைநிலை குடிமைப் பணி ஊழியர்களுக்கான இரண்டு வார கால 4 வது பயிற்சி திட்டம் முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் தொடங்கியது
Posted On:
27 MAY 2024 3:17PM by PIB Chennai
காம்பியாவின் இடைநிலை குடிமைப் பணி ஊழியர்களுக்கான 4 வது இரண்டு வார காலப் பயிற்சித் திட்டம் முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் தொடங்கியது. இந்தப் பயிற்சி 27 மே 2024 முதல் 7 ஜூன் 2024 நடைபெறுகிறது. காம்பியாவைச் சேர்ந்த 30 அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநரும், மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் துறையின் செயலாளருமான திரு வி. ஸ்ரீனிவாஸ் 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை குறிப்பிடத்தக்க அளவில் இந்திய ஆட்சி நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் நிர்வாகம் மேம்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இது இந்தியாவின் கிராமப்புறங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைப்புகளை மேம்படுத்துதல், நல்லாட்சி மாதிரிகளை அமல்படுத்துதல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவை இந்த தொலைநோக்கு பார்வையில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பயிற்சித் திட்டங்களின் கீழ் காம்பியாவைச் சேர்ந்த சுமார் 150 மூத்த அரசு ஊழியர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய மையம் இதுவரை பயிற்சி அளித்துள்ளது. நல்லாட்சிக்கான தேசிய மையம், வெளியுறவுத் துறையுடன் இணைந்து, பங்களாதேஷ், கென்யா, தான்சானியா, துனிசியா, செஷல்ஸ், காம்பியா, மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்நாம், நேபாளம், பூடான், மியான்மர், எத்தியோப்பியா, எரித்ரியா மற்றும் கம்போடியா ஆகிய 17 நாடுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.
************
Release ID: 2021793
(Release ID: 2021940)
Visitor Counter : 48