எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அஜய் குமார் சர்மாவை எஸ்ஜேவிஎன் நிறுவனத்தின் பணியாளர் பிரிவு இயக்குநராக பொதுத் துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் பரிந்துரைத்துள்ளது

प्रविष्टि तिथि: 27 MAY 2024 8:05PM by PIB Chennai

மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னணி பொதுத்துறை நிறுவனமான எஸ்ஜேவிஎன் நிறுவனத்தின் பணியாளர் பிரிவு இயக்குநர் பதவிக்கு திரு அஜய் குமார் சர்மாவை பொதுத் துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் (PESB) பரிந்துரைத்துள்ளது. மே 24, 2024 அன்று நடைபெற்ற நேர்காணல் செயல்முறையைத் தொடர்ந்து அவர் இப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரு அஜய் குமார் ஷர்மா அக்டோபர் 2009-ல் எஸ்ஜேவின் (SJVN) நிறுவனத்தில் இணைந்தார். அப்போது முதல் சிம்லாவில் உள்ள கார்ப்பரேட் தலைமையகத்தில் மனிதவளத் துறையில் அவர் பணியாற்றி வருகிறார். பணியாளர்  திட்டமிடல், நிர்வாகம், தொழில் உறவுகள், மனிதவள கொள்கை, பயிற்சி மற்றும் மனித வள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவரது பங்களிப்பு உள்ளதுமுன்பு, அவர் 1996 முதல் 2009 வரை ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றினார்.

ஏப்ரல் 8, 1974 அன்று பிறந்த திரு அஜய் குமார் சர்மா, சம்பா மாவட்டத்தின் சிஹுந்தா துணைப்பிரிவில் உள்ள கார்கட் கிராமத்தைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டமும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் மனிதவளத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.

************

ANU/PLM/KV/KR

(Release ID: 2021861)


(रिलीज़ आईडी: 2021921) आगंतुक पटल : 92
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu