சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

"உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் கோடிக்கணக்கான மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல்" குறித்த உயர்நிலைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் உரையாற்றினார்

Posted On: 27 MAY 2024 9:30PM by PIB Chennai

தென்கிழக்கு ஆசியாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய அலுவலகம் மற்றும் மத்திய அரசு இணைந்து நடத்திய உலக சுகாதார மாநாட்டின் ஒரு பகுதியாக "உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் கோடிக்கணக்கான மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய சுகாதார செயலாளர் திரு அபூர்வா சந்திரா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் முக்கிய பொது சுகாதார செயல் திட்டங்களை நிறைவேற்றுவதில் உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளை வலுப்படுத்துவதே இந்த நோக்கம் என்றார்.

 

கொவிட் காலத்தில் இந்தியா பயன்படுத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அவர் எடுத்துரைத்தார். உலகின் மருந்துத் தலைமையிடமாக இந்தியா மாறி இருப்பதாகவும் இந்தியாவில் குறைந்த செலவில் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன என்றும் அவர் கூறினார்.

************

ANU/PLM/KV/KR

(Release ID: 2021879)



(Release ID: 2021920) Visitor Counter : 42


Read this release in: English , Urdu , Hindi , Bengali