எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிதியாண்டு 2024 தணிக்கை செய்யப்பட்ட முடிவுகளை என்.டி.பி.சி அறிவித்துள்ளது; என்.டி.பி.சி குழும மின் உற்பத்தி 6% அதிகரித்து, வரிக்குப் பிறகான லாபம் 25% அதிகரிப்பு

Posted On: 25 MAY 2024 9:13AM by PIB Chennai

என்.டி.பி.சி நிறுவனம், 76,015 மெகாவாட் நிறுவப்பட்ட குழு திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் பயன்பாட்டின், 2023-24 நிதியாண்டிற்கான நிதி முடிவுகளை மே 24, 2024 அன்று அறிவித்துள்ளது.

நிதியாண்டு 2023 இன் 399 பில்லியன் யூனிட்களுடன் ஒப்பிடும்போது நிதியாண்டு 2024 இல் என்.டி.பி.சி குழுமம் 422 பில்லியன் யூனிட்களுடன் மிக உயர்ந்த வருடாந்திர மின்சார உற்பத்தியை பதிவு செய்தது, இது 6% அதிகரிப்பாகும். நிதியாண்டு 2024 இல் என்.டி.பி.சி -யின் முழுமையான மொத்த உற்பத்தியான முந்தைய ஆண்டின் 344 பில்லியன் யூனிட்களுடன் ஒப்பிடும்போது 362 பில்லியன் யூனிட்களாக, 5% அதிகரிப்பை பதிவு செய்தது.

என்.டி.பி.சி நிலக்கரி நிலையங்கள் நிதியாண்டு 2024 இன் போது தேசிய சராசரியான 69.49% க்கு எதிராக 77.25% ஆலை சுமை காரணியை அடைந்தன.

தனிப்பட்ட அடிப்படையில், நிதியாண்டு 2024 க்கான என்.டி.பி.சி-யின் மொத்த வருமானம் முந்தைய ஆண்டின் மொத்த வருமானமான ரூ.1,67,724 கோடிக்கு எதிராக ரூ. 1,65,707 கோடியாக இருந்தது. நிதியாண்டு 2024 க்கான வரிக்குப் பிந்தைய லாபம் நிதியாண்டு 2023 இல் ரூ. 17,197 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ. 18,079 கோடியாக இருந்தது, இது 5 % அதிகரிப்பபாகும்.

ஒருங்கிணைந்த அடிப்படையில், நிதியாண்டு 2024 க்கான குழுவின் மொத்த வருமானம் ரூ. 1,81,166 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் மொத்த வருமானமான ரூ. 1,77,977 கோடியுடன் ஒப்பிடும்போது, 2% அதிகரிப்பை பதிவு செய்தது. நிதியாண்டு 24 க்கான குழுவின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.  21,332 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் ரூ. 17,121 கோடியிலிருந்து, 24.60% அதிகரிப்பை பதிவு செய்தது. 

வரவிருக்கும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, நிதியாண்டு 2024-இல், ஒரு பங்குக்கு இறுதி ஈவுத்தொகையாக ரூ.  3.25 ஐ வாரியம் பரிந்துரைத்துள்ளது. நவம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2024 மாதங்களில் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு மொத்தம் ரூ. 4.50 என நிதியாண்டு 2024 க்கான இடைக்கால ஈவுத்தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

***

ANU/AD/PLM/KV

 

 

 

 


(Release ID: 2021586) Visitor Counter : 91