நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கோதுமை கொள்முதல் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, சென்ற ஆண்டின் மொத்த கொள்முதலை விஞ்சியுள்ளது
प्रविष्टि तिथि:
24 MAY 2024 12:46PM by PIB Chennai
2024-25 ரபி சந்தைப் பருவத்தில் நாட்டில் உள்ள முக்கிய கொள்முதல் மாநிலங்களில் கோதுமைக் கொள்முதல் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மத்தியத் தொகுப்பிற்கு இதுவரை 262.48 லட்சம் டன் கோதுமைக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 262.02 லட்சம் டன் என்ற அளவை விஞ்சியுள்ளது.
2024-25 ரபி சந்தைப் பருவத்தில் மொத்தம் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.59,715 கோடி வழங்கப்பட்டு 22.31 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
நெல் கொள்முதலும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 2023-24 கரீஃப் சந்தைப் பருவத்தில் ரூ.1,60,472 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டு 98.26 லட்சம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக இதுவரை 489.15 லட்சம் டன் அரிசிக்கு ஈடான 728.42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொள்முதல் நடவடிக்கைகளை அடுத்து மத்தியத் தொகுப்பில் கோதுமை மற்றும் அரிசியின் தற்போதைய இருப்பு 600 லட்சம் டன்னைக் கடந்துள்ளது.
---
(Release ID: 2021458)
SRI/SMB/KPG/RR/ANU
(रिलीज़ आईडी: 2021488)
आगंतुक पटल : 184