எரிசக்தி அமைச்சகம்

கற்றல் மற்றும் மேம்பாட்டிற்கு பவர்கிரிட் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது; மூன்றாவது முறையாக ஏடிடி சிறந்த விருதினைப் பெற்றது

Posted On: 22 MAY 2024 6:28PM by PIB Chennai

வணிக முடிவுகளை செயல்படுத்துவதில் உத்தி சார்ந்த அணுகுமுறைக்காக திறன் மேம்பாட்டிற்கான மதிப்புமிக்க  ஏடிடி (திறன் மேம்பாட்டு சங்கம், அமெரிக்கா)  சிறப்பு  விருது 2024 மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்தியப் பவர்கிரிட் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
விரிவான மின் பரிமாற்ற நெட்வொர்க்கின் திறமையான பராமரிப்பு மற்றும் பெரிய அளவிலான திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் பவர்கிரிடின் புதுமையான அணுகுமுறையை இந்த ஆண்டுக்கான  விருது எடுத்துக்காட்டுகிறது. இந்த அங்கீகாரம் கற்றல் மற்றும் மேம்பாட்டுத் துறையில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களில் பவர்கிரிடை உயர்நிலையில் வைக்கிறது. முன்னதாக 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஏடிடி சிறப்பு  விருது பெற்ற பவர்கிரிட்   தற்போது  கௌரவிக்கப்படுவது  மூன்றாவது முறையாகும்.
அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற விழாவில் பவர்கிரிட் சார்பாக இயக்குநர் (பணியாளர்) டாக்டர் யதீந்திர துவிவேதி, தலைமைப் பொதுமேலாளர் (மனிதவள மேம்பாடு) திரு பிபின் கிஷோர் முண்டு ஆகியோர் விருதைப் பெற்றுக்கொண்டனர்.
 



(Release ID: 2021399) Visitor Counter : 25