எரிசக்தி அமைச்சகம்
நிதி ஆண்டு 2024-ல் தொகுமொத்த அடிப்படையில் ரூ.46,913 கோடி மொத்த வருவாயையும் வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.15,573 கோடியையும் ஈட்டி பவர்கிரிட் சாதனை படைத்துள்ளது
Posted On:
22 MAY 2024 8:01PM by PIB Chennai
நிதி ஆண்டு 2024 மற்றும் நிதி ஆண்டு 2024-ல் முதல் காலாண்டு முடிவடைந்த காலத்தில் மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள "மஹாரத்னா" மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியப் பவர்கிரிட் கழகம் தனது நிதி சார்ந்த நிலைமைகளை அறிவித்துள்ளது.
நிதி ஆண்டு 2024-ல் முதல் காலாண்டு காலத்திற்கு தனிநிலை அடிப்படையில் இந்த நிறுவனம் ரூ.12,254 கோடி மொத்த வருவாயாகவும் ரூ.4,128 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாகவும் ஈட்டியுள்ளது. தொகுமொத்த அடிப்படையில் இந்த நிறுவனம் ரூ.12,305 கோடி மொத்த வருவாயாகவும் ரூ.4,166 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாகவும் ஈட்டியுள்ளது.
நிதி ஆண்டு 2024-க்குத் தனிநிலை அடிப்படையில் இந்த நிறுவனம் ரூ.46,215 கோடி மொத்த வருவாயாகவும் (இடைநிறுத்தப்பட்ட செயல்பாடுகள் உட்பட) ரூ.15,475 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாகவும் ஈட்டியுள்ளது. தொகுமொத்த அடிப்படையில் இந்த நிறுவனம் ரூ.46,913 கோடி மொத்த வருவாயாகவும் ரூ. 15,573 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாகவும் ஈட்டியுள்ளது.
நிதி ஆண்டு 2024-க்கு ஏற்கனவே முதலாவது மற்றும் இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையாக வழங்கப்பட்ட பங்கு ஒன்றுக்கு ரூ.8.50/- என்பதுடன் சேர்த்து இறுதி ஈவுத்தொகையாக 27.50% வழங்க (ஒவ்வொன்றும் ரூ. 10/- முகமதிப்புள்ள பங்குக்கு ரூ.2.75 வழங்க இந்த நிறுவனம் உத்தேசித்துள்ளது. இதன்படி இந்த நிதியாண்டிற்கான மொத்த ஈவுத்தொகை ஒவ்வொரு பங்குக்கும் ரூ.11.25 ஆகிறது. இது சென்ற ஆண்டைவிட 1.69% அதிகமாகும்.
நிதி ஆண்டு 2024-ல் இந்த நிறுவனம் ரூ. 12,500 கோடி மூலதனச் செலவை செய்துள்ளது. தொகுமொத்த அடிப்படையில் இதன் மூலதனமாக்கப்பட்ட சொத்து மதிப்பு ரூ.7,618 கோடியாகும். 2024, மார்ச் 31 நிலவரப்படி தொகுமொத்த அடிப்படையில் பவர்கிரிடின் மொத்த நிலையான சொத்து மதிப்பு (அந்நியச் செலாவணி மாறுபாட்டு விகிதம் நீங்கலாக) ரூ.2,75,991 கோடியாகும்.
***************
ANU/AD/SMB/KV
(Release ID: 2021392)