தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஒழுங்குமுறை ஆணையங்களின் கூட்டுக் குழுக் கூட்டத்தைக் கூட்டியது

Posted On: 22 MAY 2024 6:12PM by PIB Chennai

ஒழுங்குமுறை ஆணையங்களின் கூட்டுக் குழு  கூட்டம் 2024,  மே 21 அன்று புதுதில்லி இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியப் பங்கு பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம், நுகர்வோர் நல அமைச்சகம், இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூட்டுக் குழுவின் உறுப்பினர்களாகவும், தொலைத் தொடர்புத் துறை  மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்து கொண்டனர்.

டிராய் தலைவர் திரு அனில் குமார் லஹோட்டி கூட்டத்தில் உரையாற்றினார். ஒழுங்குமுறை ஆணையங்களின் கூட்டுக் குழு என்பது டிஜிட்டல் உலகில் ஒழுங்குமுறை தாக்கங்களை ஆய்வு செய்வதற்கும் ஒழுங்குமுறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்குமான இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் கூட்டு முயற்சியாகும்.

முதன்மை நிறுவனங்களால் (தொலைத்தொடர்பு வளங்களைப் பயன்படுத்தி வர்த்தக தொடர்புகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள். 140 தொடர்களைப் பயன்படுத்துதல்.

நுகர்வோர் எளிதாக அடையாளம் காணும் பொருட்டு முதன்மை நிறுவனங்கள் 160 தொடர்களை சேவை மற்றும் பரிவர்த்தனை அழைப்புகளுக்கு பயன்படுத்துதல் உட்பட முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021340

-----

SMB/KPG/DL



(Release ID: 2021360) Visitor Counter : 43