மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

வட இந்தியாவில் காற்று மாசு மற்றும் சுகாதார விளைவுகள் குறித்த அடிப்படை ஆராய்ச்சியை ஜோத்பூர் ஐஐடி வெளியிட்டுள்ளது

Posted On: 21 MAY 2024 4:26PM by PIB Chennai

உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு கடுமையான சுகாதார தாக்கங்களுடன், காற்று மாசுபாடு ஒரு முக்கியமான உலகளாவிய சவாலாக உள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் அடிப்படை ஆராய்ச்சியை வெளியிட்டுள்ளார். இதில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வட இந்தியாவில் உள்ள துகள்களின் ஆதாரங்கள் மற்றும் கலவைக் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் காற்று மாசுபாடு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு உள்ளூர் சமூகங்கள் மற்றும் தொடர்புடையவர்களிடையே ஒத்துழைப்பும், குறிப்பாக தில்லி போன்ற மக்கள்தொகை நெருக்கம் கொண்ட நகர்ப்புறங்களில் சமூக மாற்றங்களும் தேவை என்று கட்டுரையின் ஆசிரியரும், இணைப் பேராசிரியருமான டாக்டர் தீபிகா பட்டு வலியுறுத்துகிறார். தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவித்தல், எரிப்பு செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் காலாவதியான, அதிக சுமை மற்றும் தகுதியற்ற  வாகனங்களிலிருந்து வெளிவரும் மாசுவைத் தடுத்தல் ஆகியவற்றுக்கு ஒருங்கிணைந்த நிலையான முயற்சிகள் தேவை என்று அவர் கூறுகிறார். .

எதிர்கால சந்ததியினருக்கு பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஆதார அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் தலையீடுகளுக்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளைங்களுடைய ஆய்வு வழங்குவதாக அவர் தெரிவிக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021230

-----

 

ANU/SRI/IR/KPG/DL



(Release ID: 2021272) Visitor Counter : 89


Read this release in: English , Urdu , Marathi , Hindi_RJ