வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை (டிபிஐஐடி) யின் சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கான தேசிய கவுன்சிலில் புத்தொழில் மையம் திறக்கப்பட்டது

Posted On: 20 MAY 2024 8:23PM by PIB Chennai

சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்கள்-புத்தொழில் மையத்திற்கான தேசிய கவுன்சிலை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு சஞ்சீவ் இன்று திறந்துவைத்தார். என்சிபி துணைத் தலைவரும், ஸ்டார் சிமெண்ட் லிமிடெட் துணைத் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான திரு ராஜேந்திர சமாரியா, டால்மியா சிமெண்ட் (பி) லிமிடெட் நிறுவனத்தின் உத்தி வகுக்கும் ஆலோசகர் திரு மகேந்திர சிங்கி; என்சிபி தலைமை இயக்குநர் டாக்டர் எல்.பி.சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாற்று எரிபொருட்கள், எரிப்புக்கு முந்தைய தொழில்நுட்பம், 3-டி அச்சிடும் தொழில்நுட்பம், கார்பன் சேகரிப்பு மற்றும் பயன்பாடு போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் ஆகிய துறைகளில் லிவ்சென்ஸ் டெக்னாலஜிஸ், ஆட்டோ அபோட், ஆல்ட் எஸ்எஃப், ஆன் எலிமென்ட், பயோ ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் திரு சஞ்சீவ் கலந்துரையாடினார்.

 புத்தொழில் மையத்தை நிறுவியதற்காக  தேசிய சிமெண்ட் கவுன்சிலை (என்சிபி) அவர் பாராட்டினார். உற்பத்தித் துறைக்காக 50 புத்தொழில் நிறுவனங்களை நிறுவ வேண்டும் என்ற தனது தொலைநோக்குப் பார்வையை அவர் பகிர்ந்து கொண்டார். என்சிபி புத்தொழில் மையம் அதற்கு சிறந்த உதாரணங்களில் ஒன்றாகும். நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் சிமெண்ட் துறை மத்திய அரசின் மிக முக்கியமான பங்குதாரராக உள்ளது என்று அவர் கூறினார். சிமெண்ட் துறை தொடர்ந்து வளர்ந்து வருகிறது, இது தொழில்நுட்பம், நிலைத்தன்மை, எரிசக்தித் திறன் ஆகியவற்றின் முன்னேற்றங்களால் இயக்கப்படுகிறது. சிமெண்ட் தொழிலில் புதுமை மற்றும் வளர்ச்சியை வளர்ப்பதற்கான நமது தற்போதைய முயற்சிகளில் இந்த முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

***

(Release ID: 2021155)

SMB/AG/RR



(Release ID: 2021190) Visitor Counter : 37


Read this release in: English , Urdu , Hindi , Odia