வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவின் சரக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த மாநிலங்களை ஒன்றிணைக்கும் ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்துத் தளத்தின் பயிலரங்கு
Posted On:
20 MAY 2024 6:31PM by PIB Chennai
ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் தளம் நாட்டின் சரக்கு போக்குவரத்துத் துறையை முன்னேற்றுவதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் தலைமையில் சிறப்பு பயிலரங்கம் ஒன்று இன்று நடைபெற்றது. புதுதில்லியில் உள்ள வனிஜ்யா பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தெலங்கானா, கேரளா, ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. அத்துடன் பல்வேறு தொழில் சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜேஷ் குமார் சிங், ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து சூழலை உருவாக்க மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வளர்ப்பதில் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து தளம் ஆற்றி வரும் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். மாநிலங்கள் தங்களுடைய சரக்குப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த இந்த தளம் சிறந்த வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்“கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021131
*******
ANU/SRI/IR/KPG/DL
(Release ID: 2021143)
Visitor Counter : 71