பாதுகாப்பு அமைச்சகம்
28 பிஎச் 100 ரியர் டம்ப் ட்ரக் வண்டிகளுக்கு நார்தர்ன் கோல் ஃபீ்ல்டு நிறுவனத்திடமிருந்து ரூ.250 கோடி மதிப்பிலான ஆர்டரை பிஇஎம்எல் பெற்றுள்ளது
Posted On:
17 MAY 2024 3:18PM by PIB Chennai
28 பிஎச் 100 ரியர் டம்ப் ட்ரக் வண்டிகளுக்கு நார்தர்ன் கோல் ஃபீ்ல்டு நிறுவனத்திடமிருந்து ரூ.250 கோடி மதிப்பிலான ஆர்டரை பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் (பிஇஎம்எல்) பெற்றுள்ளது. இந்த வகையிலான ட்ரக் வண்டிகள் 100 டன் வரையிலான நிலக்கரியைக் கொண்டுசெல்லும் வகையில், தனிப்பட்ட முறையில், வடிவமைக்கப்பட்டுள்ளது.
நார்தர்ன் கோல் ஃபீ்ல்டு நிறுவனத்துடன் பிஎம்எல் நிறுவனத்தின் தொடர்ச்சியான கூட்டாண்மையின் முக்கியமான மைல் கல்லின் அடையாளத்தை இந்த ஆர்டர் காட்டுகிறது. மேலும் பாதுகாப்புத்துறையின் பொதுத்துறை நிறுவனமான பிஇஎம்எல் வடிவமைக்கும் கடினமான சுரங்கப் பணி வாகனத்தின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையையும் இது பிரதிபலிக்கிறது.
இந்த ஆர்டர் பெறப்பட்ட சாதனைக் குறித்து கருத்துத் தெரிவித்த பிஇஎம்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு ஷாந்தனு ராய், “நிலக்கரித் துறைக்கான எங்களின் பங்களிப்பு மிகவும் பெரிதாகும்”. நாட்டில் ஒரு பில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரித் தோண்டும் நிறுவனங்களின் இலக்கை எட்டுவதற்கு எங்கள் நிறுவனம் உதவியாக உள்ளது. எங்களின் பிஎச் 100 ரியர் டம்ப் ட்ரக் வண்டிகள் என்சிஎல் நிறுவனத்தின் நிலக்கரி தோண்டும் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க வகையில், உதவி செய்யும் திறனைக் கொண்டுள்ளன” என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2020881
***
AD/SMB/KPG/RR
(Release ID: 2020898)
Visitor Counter : 91