பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள முன்னணி ஆயிரம் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகள் குறித்த வட்டமேசை ஆலோசனைக்கு கார்ப்பரேட் விவகாரங்களுக்கான கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது
Posted On:
17 MAY 2024 9:30AM by PIB Chennai
'இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள முன்னணி ஆயிரம் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் & டி) செலவினங்கள்' குறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் ஆதரவுடன் இந்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான கல்வி நிறுவனத்தின் (IICA) சார்பில் இன்று (17.05.2024) புதுதில்லியில் வட்டமேசை ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்கள் குறித்த கார்ப்பரேட் நிறுவனங்களின் கருத்துக்களை பெறுவதற்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்வதன் தேவையை உணர்த்துவதற்கும், இந்த வட்டமேசை ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் சிறப்புரையாற்றிய மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் வலுவான மற்றும் தரப்படுத்தப்பட்ட அளவுகோல்கள் பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சேவை சார்ந்த பொருளாதாரத்துடன் உற்பத்தி மற்றும் தயாரிப்பு சார்ந்த பொருளாதாரமும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் அஜய் பூஷண் பாண்டே, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் சர்வதேச அளவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை எடுத்துரைத்தார். டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முன்னோடியாக மாறியிருப்பதன் மூலம் இந்தியா வெற்றிகரமாக பலவிதங்களில் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் அறிவியல் செயலாளர் டாக்டர் பர்விந்தர் மைனி, நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் பல்வேறு முயற்சிகளை எடுத்துரைத்தார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் செயலாளர் திரு சுனில்குமார் பேசுகையில், நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான தரவுகளைப் பெற்று நிர்வகிப்பதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்முயற்சிகளை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு இந்தர் தீப் சிங் தரிவால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்பது நாட்டின் எதிர்காலத்திற்கான முக்கிய கடமையாகும் என்றார்.
***
(Release ID: 2020866)
AD/PLM/AG/RR
(Release ID: 2020884)
Visitor Counter : 75