திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

இந்தியாவின் மிகப்பெரிய திறன் போட்டியை திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக செயலாளர் திரு ஏ.கே. திவாரி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

Posted On: 15 MAY 2024 7:30PM by PIB Chennai

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி இன்று இந்தியா திறன் போட்டி 2024-தொடங்கி வைத்தார்.

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் சார்பில் புதுதில்லி, துவாரகாவில் உள்ள யஷோபூமியில் நடைபெற்ற இப்போட்டியில் 30-க்கும் அதிகமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 900-க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அதுல் குமார் திவாரி, இந்தியா திறன் போட்டி 2024 என்பது போட்டி மட்டுமல்லாமல் திறமை, புதுமை மற்றும் உறுதிப்பாட்டின் கொண்டாட்டம் என்று கூறினார். இளைஞர்களின் எல்லையற்ற திறன் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அவர்களின் திறனுக்கு இது ஒரு சான்றாகும் என்று அவர் மேலும் கூறினார். இது கனவுகளை நனவாக்கும் மற்றும் விருப்பங்களை வளர்க்கும் ஒரு தளம் என்றும் அவர் கூறினார். இப்போட்டியில் கலந்து கொள்வோரின் திறன்கள் குறித்து தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அவர்கள் உலகத்திறன் போட்டி 2024-ல் சிறந்து விளங்குவார்கள் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அடுத்த மூன்று நாட்களுக்கு பங்கேற்பாளர்கள், கட்டுமானம் மற்றும் கட்டிட தொழில்நுட்பம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், உற்பத்தி பொறியியல் தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் வரை பல்வேறு திறன்களில் போட்டியிடுவார்கள். இந்த நிகழ்வு மே 19-ம் தேதி நிறைவடையும்.

***

SMB/IR/AG/KV

 (Release ID: 2020770) Visitor Counter : 34