பாதுகாப்பு அமைச்சகம்
டார்ஜிலிங்கின் பெங்டுபியில் 'குறைதீர்ப்பு முகாம்’ நிகழ்ச்சிக்கு முன்னாள் படைவீரர் நலத்துறை ஏற்பாடு செய்திருந்தது
Posted On:
15 MAY 2024 7:36PM by PIB Chennai
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள பெங்டுபி ராணுவ முகாமில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 'குறைதீர்ப்பு முகாம்' நடைபெற்றது. முன்னாள் படைவீரர்களுடன் கலந்துரையாடிய முன்னாள் படைவீரர் நலத்துறை செயலாளர் டாக்டர் நிதின் சந்திரா, அவர்களுக்கான நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறினார். பல்வேறு நலத்திட்டங்களைப் பெறும்போது முன்னாள் வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்த டாக்டர் நிதின் சந்திரா, முன்னாள் படைவீரர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் செயலூக்கமான தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு நடைமுறையை ஏற்படுத்துமாறு பிற முகமைகளுக்கு அறிவுறுத்தினார்.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் செய்த தியாகங்களை கௌரவிக்கும் வகையில், துறையின் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்யும் முயற்சியே 'குறைதீர்ப்பு முகாம்' ஆகும்.
முன்னாள் படைவீரர்கள் சமூகத்திற்கு நேர்மறையாக பங்களிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்க இந்த முகாம் முயற்சி செய்கிறது.
***
SMB/IR/AG/KV
(Release ID: 2020769)