கலாசாரத்துறை அமைச்சகம்
இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் கண்காட்சி, தாகூரின் நீடித்த மாண்பை பறைசாற்றுகிறது
प्रविष्टि तिथि:
14 MAY 2024 10:42PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (ஐ.ஜி.என்.சி.ஏ) பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஆவணக் காப்பகப் பிரிவு அண்மையில் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை நினைவுகூரும் கண்காட்சி மற்றும் விரிவுரை நிகழ்வை நடத்தியது. 'ரவீந்திரநாத் தாகூரின் அரிய புகைப்படங்கள்' என்ற தலைப்பிலான இந்தக் கண்காட்சியை திரு கணேஷ் நாராயண் சிங் தொகுத்து வழங்கினார். இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் உறுப்பினர் செயலாளர் டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்தக் கருத்தரங்கில் டாக்டர் ஃபேபியன் சார்ட்டியர், திரு நீல்கமல் அடக் மற்றும் திரு பாசு ஆச்சார்யா உள்ளிட்ட மதிப்புமிக்க பேச்சாளர்கள் கலந்து கொண்டு, தாகூரின் மாண்பு குறித்து பல்வேறு கண்ணோட்டங்களை வழங்கினர். பாதுகாப்பு மற்றும் ஆவணக் காப்பகத்தின் தலைவர் பேராசிரியர் அச்சல் பாண்டியா, இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் செயற்பாட்டாளர் டாக்டர் சஞ்சய் ஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். கண்காட்சி, மே 19, 2024 வரை நடைபெறும்.
டாக்டர் ஃபேபியன் சார்ட்டியர், 'தாகூரின் பிரெஞ்சு இணைப்பு' என்ற தலைப்பில் ஆராய்ந்து, ரவீந்திரநாத் தாகூரைப் படிப்பதற்கான தனது 27 ஆண்டுகால அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டினார். பிரான்சில் தாகூரின் வரவேற்பை அவர் வலியுறுத்தினார். முதல் உலகப் போரின் களநிலைமையைப் பார்வையிட்டபோது அவரது உணர்ச்சிபூர்வமான பதில் உட்பட, அவரது ஆழ்ந்த மனிதநேயத்தை டாக்டர் ஃபேபியன் சார்ட்டியர் வெளிப்படுத்தினார். அலெக்ஸாண்ட்ரா டேவிட் நீலின் பரிந்துரைக் கடிதங்களைக் குறிப்பிட்டு, மேற்கத்திய நாடுகளில் தாகூருக்கு கிடைத்த வரவேற்பு குறித்தும் அவர் எடுத்துரைத்தார். தாகூரின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை சார்ட்டியர் விளக்கியதுடன், அவர் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவரைப் பற்றிய கருத்துக்களை வடிவமைக்கும் விவாதங்கள் இருந்தன என்பதை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, தாகூருக்கு பிரெஞ்சு மொழியைக் கற்பிக்க விக்டோரியா ஒகாம்போ மேற்கொண்ட முயற்சிகளை சார்ட்டியர் குறிப்பிட்டார். மற்ற பேச்சாளர்களான திரு நீல்கமல் அடக், திரு பாசு ஆச்சார்யா ஆகியோர் முறையே 'ரவீந்திரநாத் தாகூர்: ஒரு கலைஞரின் எழுச்சி' மற்றும் 'தாகூரின் பிரான்ஸ் பயணம் மற்றும் அதன் தாக்கம்' குறித்து பேசினர்.
***
(Release ID: 2020630)
SMB/BR/RR
(रिलीज़ आईडी: 2020641)
आगंतुक पटल : 115