இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
பசுமை உயிரி ஹைட்ரஜன் உற்பத்திக்காக தரிசு நிலங்களில் பயோமாஸ் உற்பத்தி குறித்து விவாதிக்க மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
14 MAY 2024 6:57PM by PIB Chennai
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் தலைமையில் பசுமை உயிரி ஹைட்ரஜன் உற்பத்தி குறித்து இன்று (14.5.24) புதுதில்லியில் கூட்டம் நடைபெற்றது. பயன்பாடற்ற தரிசு நிலங்களில் உயிரி எரிபொருள் உற்பத்தி குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பேராசிரியர் அஜய் குமார் சூட் தமது தொடக்க உரையில், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக பயோமாஸ் எனப்படும் கரிமப் பொருட்களின் அடிப்படையிலான பசுமை உயிரி ஹைட்ரஜன் உற்பத்தி அமைந்துள்ளது என்றார். நாட்டின் உயிரி எரிபொருள் உற்பத்திச் சூழல் அமைப்பை புரிந்து கொண்டு அதை மேம்படுத்துவது முக்கியம் என்று அவர் தெரிவித்தார். பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலம் குறித்த தகவல்களை சேகரிப்பது, பயோமாஸ் எனப்படும் கரிமப் பொருட்களின் உற்பத்தியில் உள்ள இடைவெளிகள் மற்றும் சவால்களை அடையாளம் காண்பது உள்ளிட்டவையே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று பேராசிரியர் சூட் எடுத்துரைத்தார்.
உயிரி தொழில்நுட்பத் துறை (டிபிடி) செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, கடற்பாசி சாகுபடியை உயிரி எரிசக்தி உற்பத்திக்கான பயோமாஸாக மாற்றுவதற்கான வாய்ப்புகளை விளக்கினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் தேசிய தொலையுணர்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் பிரகாஷ் சௌகான், வேளாண் கழிவுகளிலிருந்து உயிரி கழிவுகளைப் பிரித்தெடுப்பது குறித்த செயல்திட்டத்தை விளக்கினார்.
-----
AD/PLM/KPG/DL
(रिलीज़ आईडी: 2020613)
आगंतुक पटल : 150