பாதுகாப்பு அமைச்சகம்

தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விரிவுரைகளுக்கும் சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தது

Posted On: 10 MAY 2024 6:01PM by PIB Chennai

ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று கொண்டாடப்படும் தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, 2024 மே 10, அன்று அதன் ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்களில் பல்வேறு விரிவுரைகள் மற்றும் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. புதுதில்லியில் பாதுகாப்பு அறிவியல் மன்றம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் தலைமை தாங்கினார்.

அவர் தனது உரையில், நாட்டை வலுவாகவும் தன்னம்பிக்கையுடனும் மாற்றுவதற்கான அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்குவதன் மூலம் தேச சேவைக்கு தங்களை மீண்டும் அர்ப்பணிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பல்வேறு டிஆர்டிஓ ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து மொத்தம் 45 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டன. வற்றில் சிறந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் டிஆர்டிஓ தொழில்நுட்ப தின தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் கே.பி.பாலன் எழுதிய  நூல் ஒன்று வெளியிடப்பட்டது. டிஆர்டிஓ செய்திமடல் (2024); பாதுகாப்பு அறிவியல் இதழ் (மே 2024), பாதுகாப்பு அறிவியல் தகவல் மற்றும் ஆவணப்படுத்தல் மையம், நூலக அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப இதழ் ஆகியவையும் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தேசிய தொழில்நுட்ப தின சொற்பொழிவாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்தியா நடத்திய வெற்றிகரமான அணுசக்தி சோதனையை நினைவுகூரவும், நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகித்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவிப்பதற்கும் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. தேச நிர்மாணத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாகவும் இது அமைகிறது.

***

AD/SMB/AG/DL



(Release ID: 2020271) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi , Marathi