பாதுகாப்பு அமைச்சகம்
முப்படைகளுக்கு இடையேயான அமைப்புகள் (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) சட்டம் குறித்த அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
10 MAY 2024 4:04PM by PIB Chennai
முப்படைகளுக்கு இடையேயான அமைப்புகள் (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) சட்டம், 2024 மே 10 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முப்படைகளுக்கு இடையேயான அமைப்புகளின் (ஐஎஸ்ஓக்கள்) பயனுள்ள கட்டளை, கட்டுப்பாடு மற்றும் திறமையான செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக, 2023 மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா 2023. ஆகஸ்ட் 15 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.
ஒவ்வொரு தனிப்பட்ட சேவையின் தனித்துவமான சேவை நிலைமைகளுக்கு இடையூறு விளைவிக்காமல், ஒழுக்கம் மற்றும் நிர்வாகத்தைத் திறம்பட பராமரிப்பதற்காக, முப்படைகளுக்கு இடையேயான அமைப்புகளின் தலைமைத் தளபதிகள் மற்றும் கமாண்டர்களுக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
இந்த அறிவிக்கையின் மூலம், இந்தச் சட்டம் முப்படைகளுக்கு இடையேயான அமைப்புகளின் தலைவர்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், வழக்குகளை விரைந்து முடிப்பதற்கும், ஒன்றுக்கு மேற்பட்ட நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கும், ஆயுதப்படை வீரர்களிடையே அதிக ஒருங்கிணைப்பை நோக்கிய ஒரு செயல்பாடாகவும் இருக்கும்.
***
(Release ID: 2020222)
SMB/AG/KR
(रिलीज़ आईडी: 2020230)
आगंतुक पटल : 148