மத்திய பணியாளர் தேர்வாணையம்
இந்திய வனப் பணி 2023 இறுதி தேர்வு முடிவை மத்திய குடிமைப்பணி தேர்வாணையம் அறிவித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAY 2024 4:49PM by PIB Chennai
மத்திய குடிமைப்பணி தேர்வாணையம் இந்திய வனப் பணி 2023 தேர்வின் ஒரு பகுதியாக 2023 நவம்பர் 26 முதல் டிசம்பர் 03 வரை நடத்திய எழுத்து தேர்வின் அடிப்படையிலும் 2024 ஏப்ரல் 22 முதல் மே 1 வரை நடத்திய நேர்முகத் தேர்வின் அடிப்படையிலும் இந்திய வனப் பணி நியமனத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பொதுப்பிரிவைச் சேர்ந்த 43 பேரும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினரில் 20 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 51 பேரும், பட்டியல் வகுப்பினரில் 22 பேரும், பழங்குடியினரில் 11 பேரும் என மொத்தம் 147 பேரை பணியில் நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2019969
***
AD/IR/AG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2019990)
வருகையாளர் எண்ணிக்கை : 141