இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

சிக்கிம் உர்ஜா நிறுவனத்தில் கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் கூடுதல் பங்குகளை வாங்க சிசிஐ ஒப்புதல்

प्रविष्टि तिथि: 07 MAY 2024 9:01PM by PIB Chennai

சிக்கிம் உர்ஜா லிமிடெட் (முன்னர் டீஸ்டா உர்ஜா லிமிடெட்) நிறுவனத்தில் கிரீன்கோ எனர்ஜிஸ் பிரைவேட் லிமிடெட் கூடுதல் பங்குகளை வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது .

 

கிரீன்கோ எனர்ஜிஸ் என்பது இந்தியாவில் இணைக்கப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாகும். இது (மறைமுகமாக) கிரீன்கோ மொரிஷியஸ் நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமாகும். கிரீன்கோ மொரிஷியஸ் உடன் இணைக்கப்பட்ட கிரீன்கோ எனர்ஜி ஹோல்டிங்ஸ் (ஜிஇஎச்) நிறுவனத்திற்கு முழுமையாக சொந்தமானது. இது கிரீன்கோ குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமாகும். (ஜிஇஎச்) என்பது ஒரு முதலீட்டு ஹோல்டிங் நிறுவனமாகும், இது இந்தியாவில் மின் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.

 

சிக்கிம் உர்ஜா என்பது இந்தியாவின் வடக்கு சிக்கிமில், 1200 மெகாவாட் (ஒவ்வொன்றும் 200 மெகாவாட் கொண்ட 6 அலகுகள்) நீர்மின் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்திற்காக இணைக்கப்பட்ட ஒரு சிறப்பு நோக்க அமைப்பாகும். இதில் சி.சி.ஐ.யின் விரிவான உத்தரவு பின்பற்றப்படும்.

***

PKV/RR/KR

 


(रिलीज़ आईडी: 2019913) आगंतुक पटल : 102
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu