தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பையடுத்து ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தீவிர மதிப்பீடு செய்ய உள்ளது

Posted On: 07 MAY 2024 8:27PM by PIB Chennai

கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தத் தீர்ப்பு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம், 1952-ன் பத்தி 83 மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995-ன் பத்தி 43ஏ ஆகியவற்றில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சர்வதேச தொழிலாளர்களுக்கான குறிப்பிட்ட விதிகள் தொடர்பானதாகும். அவை அரசியலமைப்பின் 14 வது பிரிவுக்கு முரணானவை என்று கருதப்படுகின்றன. இந்தத் தீர்ப்பைக் கவனத்தில் கொண்டு இபிஎஃப்ஓ தீவிரமாக மதிப்பீடு செய்து வருகிறது.

 

இந்தியா தற்போது 21 நாடுகளுடன் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் பரஸ்பர அடிப்படையில் இந்த நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு தொடர்ச்சியான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இந்த நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் ஒவ்வொருவரும் மற்றப் பகுதிகளில் வேலைவாய்ப்பை மேற்கொள்ளும்போது, அவர்களின் சமூகப் பாதுகாப்பு தடையின்றி இருக்கும். இந்த ஒப்பந்தங்கள் சர்வதேச வேலைவாய்ப்பின் போது ஊழியர்களின் தடையற்ற சமூகப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சர்வதேச நகர்வை ஊக்குவிப்பதற்கும், மக்கள் தொகையின் அடிப்படையிலும், மேம்படுத்தப்பட இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவையாகும். இத்தகைய சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கான இந்தியாவின் செயல்பாட்டு முகமையாக இபிஎஃப்ஓ செயல்படுகிறது.

 

***

 

PKV/RR/KR



(Release ID: 2019912) Visitor Counter : 52