சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நாட்டின் கனிம உற்பத்தி பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது

Posted On: 02 MAY 2024 6:52PM by PIB Chennai

2024 பிப்ரவரி மாதத்திற்கான சுரங்கம் மற்றும் குவாரி துறையின் கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை: 2011-12=100) 139.6 ஆக உள்ளது. 2023 பிப்ரவரி மாத நிலையுடன் ஒப்பிடும்போது இது 8.0% அதிகமாகும். இந்திய சுரங்கப் பணியகத்தின்  தற்காலிகப் புள்ளிவிவரங்களின்படி, 2023-24 ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி, முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட 8.2% ஆகும்.  

2024 பிப்ரவரியில் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி அளவு: நிலக்கரி 966 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 42 லட்சம் டன், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 2886 மில்லியன் கன மீட்டர், பெட்ரோலியம் (கச்சா) 23 லட்சம் டன், பாக்சைட் 2414 ஆயிரம் டன், குரோமைட் 4 லட்சம் டன், தாமிரம் 11 ஆயிரம் டன், தங்கம் 255 கிலோ, இரும்புத் தாது 244 லட்சம் டன், அடர் ஈயம் 27 ஆயிரம் டன், மாங்கனீஸ் தாது 295 ஆயிரம் டன், செறிவூட்டப்பட்ட துத்தநாகம் 149 ஆயிரம் டன், சுண்ணாம்புக்கல் 387 லட்சம் டன், பாஸ்போரைட் 218 ஆயிரம் டன், மேக்னசைட் 10 ஆயிரம் டன்.

2023 பிப்ரவரி மாதத்தை விட 2024 பிப்ரவரி மாதத்தில் நேர்மறை வளர்ச்சியைக் காட்டும் முக்கியமான கனிமங்கள் பின்வருமாறு: தங்கம் (86%), தாமிரம் (28.7%), பாக்சைட் (21%), குரோமைட் (21%), பாஸ்போரைட் (19%), சுண்ணாம்புக்கல் (13%), நிலக்கரி (12%), இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) (11%), பெட்ரோலியம் (கச்சா) (8%), மாங்கனீஸ் தாது (6%), மேக்னசைட் (3%), பழுப்பு நிலக்கரி (2.8%), மற்றும் செறிவூட்டப்பட்ட துத்தநாகம் (2.8%). எதிர்மறை வளர்ச்சியைக் காட்டும் பிற முக்கிய கனிமங்கள்: இரும்புத் தாது (-0.7%), அடர் காரீயம் (-14%).

***

SMB/BR/KV

 

 

 


(Release ID: 2019510) Visitor Counter : 61


Read this release in: English , Urdu , Hindi , Punjabi