கலாசாரத்துறை அமைச்சகம்
ஐ.ஜி.என்.சி.ஏவில் நடைபெற்ற கார்ல் எரிக் முல்லரின் அச்சுப் பதிவுகளைக் காட்சிப்படுத்தும் கண்காட்சி
Posted On:
01 MAY 2024 9:37PM by PIB Chennai
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (ஐ.ஜி.என்.சி.ஏ) பாதுகாப்பு மற்றும் ஆவணக் காப்பகப் பிரிவு 'இந்தியாவின் மக்கள் மற்றும் இடங்கள் - ஒரு பின்னோக்கம்' என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை நடத்தியது. இந்தக் கண்காட்சியில் ஐ.ஜி.என்.சி.ஏ ஆவணக்காப்பகத்தைச் சேர்ந்த கார்ல் எரிக் முல்லரின் அச்சுப் பதிவுகள் இடம் பெற்றன. இந்திரா காந்தி தேசிய பசுமை முகமையின் உறுப்பினர் செயலாளர் டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புகழ்பெற்ற லித்தோகிராஃபி மற்றும் அச்சு வடிவமைப்பு கலைஞரான திரு தத்தாத்ரேய ஆப்தே கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
கண்காட்சியை டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி மற்றும் திரு தத்தாத்ரேய ஆப்தே ஆகியோர் தொடங்கி வைத்தனர். கார்ல் எரிக் முல்லரின் படைப்புகளை காட்சிப்படுத்தும் பட்டியல் வெளியிடப்பட்டது.
திரு தத்தாத்ரேய ஆப்தே தனது உரையில், எரிக் முல்லருடன் தனது கலைப் படைப்புகள் மூலம் தனக்குள்ள ஆழமான தொடர்பை வெளிப்படுத்தினார். முல்லரின் அச்சுப்பதிவுகள் மக்கள் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய அவரது கூர்மையான அவதானிப்புகளின் பிரதிபலிப்பாக எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அவர் விரிவாக விளக்கினார். சோசலிசத்தால் ஈர்க்கப்பட்ட முல்லர், தனது காலத்தின் சவால்களை கூர்மையாகக் கண்டார். அவற்றை அவர் தனது கலையின் மூலம் திறமையாக சித்தரித்தார். தனிப்பட்ட அனுபவங்களை சக்திவாய்ந்த கலை வெளிப்பாடுகளாக மொழிபெயர்க்கும் கலைஞரின் திறனை திரு தத்தாத்ரேயா ஆப்தே பாராட்டினார்.
டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி தனது உரையில், லித்தோகிராஃப்களின் தனித்துவம், அரிதான தன்மை ஆகியவற்ற வெளிப்படுத்தினார். அவை சாதாரண வாழ்க்கையின் சாரத்தை எவ்வாறு உள்ளடக்குகின்றன என்பதை அவர் விளக்கினார். எல்லா வெளிப்பாடுகளுக்கும் ஏராளமான ஆதாரங்கள் தேவையில்லை என்று கூறிய அவர், கார்ல் எரிக் முல்லர் தனது லித்தோகிராஃப்கள் மூலம் இந்த ஆழமான போதனையை எவ்வாறு தொடர்பு கொள்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2019378
***
(Release ID: 2019378)
PKV/KPG/RR
(Release ID: 2019402)