நிதி அமைச்சகம்
சட்ட அமலாக்க முகமைகள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நிதித் தொழில்நுட்பச் சூழலியல் கூட்டாளிகளுடன் நடைபெற்ற பயிலரங்கிற்கு நிதிச் சேவைகள் துறை செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி தலைமை தாங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 APR 2024 9:25PM by PIB Chennai
நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதிச் சேவைகள் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை இணைந்து சட்ட அமலாக்க முகமைகள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நிதித் தொழில்நுட்பச் சூழலியல் கூட்டாளிகளுடன் இணைந்து புதுதில்லியில் இன்று அரை நாள் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. பிப்ரவரி 26, 2024 அன்று புத்தொழில் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நடத்திய கடைசி கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டது.
புதுமைகளை ஊக்குவிப்பதற்கும், தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உரிய இணக்கத்தை உறுதி செய்வதற்கும், சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி மோசடிகள் போன்ற முக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கும், மிக முக்கியமாக கூட்டாளிகளிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கும் நிதித் தொழில்நுட்ப மற்றும் சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இந்தப் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய நிதிச் சேவைகள் துறை செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி, இந்தியாவின் உயர்ந்த மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பை வலியுறுத்தினார். இந்தியாவில் புதிய தொழில் தொடங்குதல் மற்றும் நிதித் தொழில்நுட்பத் துறையின் முழுத் திறனையும் பயன்படுத்திக் கொள்ள அரசு, ஒழுங்குமுறை அமைப்பு, பொதுத்துறை, தனியார் துறை ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்று டாக்டர் ஜோஷி வலியுறுத்தினார்.
நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்கொள்ளும் செயல்பாட்டு முறைகள் மற்றும் முக்கிய சவால்களை நிதித் தொழில்நுட்ப சங்கங்கள் முன்வைத்தபோது, மாநிலங்களைச் சேர்ந்த சட்ட அமலாக்க முகமைகள் சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடிகளைத் தடுப்பதற்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
***
(Release ID: 2019244)
SMB/BR/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2019306)
வருகையாளர் எண்ணிக்கை : 160