சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2018 முதல் (கொவிட் காரணமாக ஊரடங்கு செய்யப்பட்ட 2020 ஆம் ஆண்டைத் தவிர) கடந்த 06 ஆண்டுகளின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் 2024-ல் தில்லி அதிகபட்ச எண்ணிக்கையிலான 'நல்ல மற்றும் மிதமான' காற்றின் தர நாட்களைப் பதிவு செய்துள்ளது

प्रविष्टि तिथि: 30 APR 2024 7:53PM by PIB Chennai

தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த காற்றுத் தர மேலாண்மை ஆணையம் மற்றும் பல்வேறு பங்குதாரர்களின் நிலையான, விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் இணைந்து, சாதகமான வானிலை நிலைமைகளின் விளைவாக, 2018 தொடங்கி கடந்த 06 ஆண்டுகளில் (கொவிட் காலமான 2020 தவிர) இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2024 ஏப்ரலில் அதிகபட்ச எண்ணிக்கையிலான 'நல்ல மற்றும் மிதமான' காற்றின் தர நாட்களை தில்லி பதிவு செய்துள்ளது. 2024 ஏப்ரலில் தில்லியில் 'நல்ல முதல் மிதமான' காற்றின் தரம் கொண்ட நாட்களின் எண்ணிக்கை 23-ஆக இருந்தது. இது 2023-ல் 17, 2022-ல் 0,  2021-ல் 18, 2020-ல் 30, 2019-ல் 12, 2018-ல் 8 என இருந்தது.

 

இந்த காலகட்டத்தில் தில்லியின் சராசரி காற்றின் தரக்குறியீடு மிதமான பிரிவில் இருந்தது. அதாவது 200-க்கும் குறைவாக இருந்தது. 2024 ஏப்ரலில், தில்லி அதன் இரண்டாவது மிகக் குறைந்த மாதாந்தர சராசரி காற்றின் தரக் குறியீட்டைக் கொண்டிருந்தது. இது 2018 முதல் கடந்த 06 ஆண்டு காலப்பகுதியில் (2020 தவிர்த்து - கொவிட் காரணமாக முழு முடக்கம் செய்யப்பட்ட ஆண்டு) ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் தில்லியில் மாத வாரியான தினசரி சராசரி காற்றுத் தரக்குறியீடு  2024-ல் 182, 2023-ல் 180, 2022-ல் 255, 2021-ல் 202, 2020-ல் 110, 2019-ல் 211, 2018-ல் 222 ஆக இருந்தது.

***

(Release ID: 2019223)

ANU/SMB/KPG/RR


(रिलीज़ आईडी: 2019304) आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी