நிதி அமைச்சகம்
மத்திய நேரடி வரிகள் வாரியம் படிவம் 10ஏ/10ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024, ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது
Posted On:
25 APR 2024 5:21PM by PIB Chennai
மத்திய நேரடி வரிகள் வாரியம் 25.04.2024 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, படிவம் 10ஏ/10ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024, ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.
கடைசியாக நீட்டிக்கப்பட்ட தேதியான 30.09.2023-க்கு அப்பால் இதுபோன்ற படிவங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கக் கோரி மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது..
படிவம் 10ஏ / படிவம் 10ஏபி- க்கான விண்ணப்பங்கள் வருமான வரித் துறையின் மின்னணு முறையிலான போர்ட்டலில் தாக்கல் செய்யலாம். 07/2024 சுற்றறிக்கையின் முழுவிவரத்தை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2018850
***
AD/SMB/AG/RR/DL
(Release ID: 2018868)
Visitor Counter : 129