கலாசாரத்துறை அமைச்சகம்
இந்திய வரலாற்றுப் பதிவுகள் ஆணையம் ஒரு புதிய இலச்சினை மற்றும் குறிக்கோள் வாசகத்தை அறிமுகம் செய்துள்ளது
प्रविष्टि तिथि:
25 APR 2024 2:41PM by PIB Chennai
ஆவணக்காப்பக விவகாரங்களுக்கான உயர் ஆலோசனை அமைப்பான இந்திய வரலாற்றுப் பதிவுகள் ஆணையம் (ஐ.எச்.ஆர்.சி), பதிவுகளை உருவாக்குபவர்கள், பாதுகாப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களின் அகில இந்திய மன்றமாக செயல்படுகிறது. இது பதிவுகளின் மேலாண்மை மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது. 1919-ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஐ.எச்.ஆர்.சி, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
ஐ.எச்.ஆர்.சி-யின் தனித்துவமான அடையாளம் மற்றும் அதன் நெறிமுறைகளைத் தெரியப்படுத்துவதற்காக, புதிய இலச்சினை மற்றும் குறிக்கோள் வாசக வடிவமைப்பு போட்டி நடைபெற்றது. மைகவ் (MyGov) இணையதளத்தில் 2023-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்போட்டியில், மொத்தம் 436 உள்ளீடுகள் பெறப்பட்டன.
தில்லியைச் சேர்ந்த திரு ஷௌர்யா பிரதாப் சிங் வடிவமைத்து சமர்ப்பித்த இலச்சினை மற்றும் குறிக்கோள் வாசகம் தேர்வு செய்யப்பட்டு இரண்டுக்குமான முதல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலச்சினை மற்றும் சிறந்த குறிக்கோள் வாசகங்களின் தலா நான்கு உள்ளீடுகளுக்கு ஆறுதல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெற்றி பெற்ற உள்ளீட்டுக்கு 50,000 ரூபாயும் ஆறுதல் பரிசு பெற்ற உள்ளீடுகளுக்கு தலா 5,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
***
(Release ID: 2018827)
ANU/SRI/PLM/KPG/RR
(रिलीज़ आईडी: 2018838)
आगंतुक पटल : 182