சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நெதர்லாந்தில் உள்ள பில்தோவன் பயோலாஜிக்கல் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் பார்வையிட்டார். அதன் தலைமை நிர்வாக அதிகாரியை சந்தித்து பேசினார்
प्रविष्टि तिथि:
24 APR 2024 6:24PM by PIB Chennai
மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் திரு அபூர்வ சந்திரா நெதர்லாந்தின் உட்ரெக்டில் உள்ள உலகளாவிய மருந்து தயாரிப்பு நிறுவனமான பில்தோவன் பயோலாஜிக்கல்ஸின் உற்பத்திப் பிரிவை பார்வையிட்டார். பில்தோவனில் உள்ள பூனவல்லா அறிவியல் பூங்காவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜூர்கன் குவிக், தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜெஃப் டி கிளெர்க் ஆகியோருடன் ஐரோப்பிய ஒன்றிய தொற்றுநோய் தயார்நிலை, தடுப்பூசி உற்பத்தியில் ஒத்துழைப்பு குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் மூத்த நிர்வாகிகளை சந்தித்தார். தொழிற்சாலையின் பல்வேறு உற்பத்தி பிரிவுகள் குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் எதிர்கால உற்பத்தித் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் தரப்பட்டது. பில்தோவன் பயோலாஜிக்கல்ஸ் நிறுவனம் போலியோ, தொண்டை அழற்சி நோய், டெட்டனஸ் ஆகியவற்றிற்கான தடுப்பூசிகள் போன்ற மருந்து தயாரிப்புகளை பி.சி.ஜி உடன் உற்பத்தி செய்கிறது.
இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் கிளையான நெதர்லாந்தைச் சேர்ந்த பில்தோவன் பயோலாஜிக்கல்ஸ் பி.வி.யுடன் பாரத் பயோடெக் இணைந்து செயல்படும். இந்தியாவிலும் உலக அளவிலும் வழங்குவதற்காக வாய்வழி போலியோ சொட்டு மருந்து கொள்முதல் செய்ய பாரத் பயோடெக் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இது போலியோ சொட்டு மருந்து வழங்குவதில் பங்களிப்பு செய்யும் இந்த ஒத்துழைப்பின் மூலம், போலியோ சொட்டு மருந்து தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் திறன் ஒவ்வொரு ஆண்டும் 500 மில்லியன் டோஸ்களாக அதிகரித்துள்ளது.
***
(Release ID: 2018755)
SMB/AG/RR
(रिलीज़ आईडी: 2018811)
आगंतुक पटल : 119