சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிக்கலான மற்றும் உத்திசார் கனிமங்கள் துறையில் புவி இயற்பியல் ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஜி.ஆர்.ஐ-உடன் கே.ஏ.பி.ஐ.எல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Posted On: 24 APR 2024 8:03PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கௌன்சில் - தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஜி.ஆர்.ஐ) உடன், கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (கே.ஏ.பி.ஐ.எல்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. புவனேஸ்வரில் உள்ள என்.ஏ.எல்.சி.ஓ கார்ப்பரேட் அலுவலகத்தில் என்.ஏ.எல்.சி.ஓவின் தலைவரும், மேலாண் இயக்குநரும், கே.ஏ.பி.ஐ.எல்-இன்  தலைவருமான திரு ஸ்ரீதர் பத்ரா முன்னிலையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்.ஏ.எல்.சி.ஓவின் இயக்குநரும் (வர்த்தகம்), கே.ஏ.பி.ஐ.எல்-இன் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு சதாஷிவ் சமந்தராய், சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஜி.ஆர்.ஐ இயக்குநர் டாக்டர் பிரகாஷ் குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

புவி பௌதீக, புவி ரசாயன மற்றும் புவிச்சரிதவியல் அளவீடுகள், தரவு பகுப்பாய்வு, பொருள்கோடல் மற்றும் மாதிரியாக்கம், விஞ்ஞான அறிவு பகிர்வு, தொழில்நுட்ப உதவி மற்றும் ஆலோசனை சேவைகள் ஆகிய விஷயங்களில் இந்த ஒத்துழைப்பு கவனம் செலுத்தும்.

இந்த ஒத்துழைப்பு தற்போது நடைபெற்று வரும் கே.ஏ.பி.ஐ.எல் திட்டங்களில் புதுமை மற்றும் செயல்பாட்டு நுண்ணறிவுகளை ஊக்குவிக்க வழிவகுக்கும் என்று திரு ஸ்ரீதர் பத்ரா கூறினார்.

கே.ஏ.பி.ஐ.எல் என்பது மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் (என்.ஏ.எல்.சி.ஓ), இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (ஹெச்.சி.எல்), மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் (எம்.இ.சி.எல்) ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

***

(Release ID: 2018782)

SMB/BR/RR


(Release ID: 2018806) Visitor Counter : 66


Read this release in: English , Urdu , Hindi , Punjabi