எரிசக்தி அமைச்சகம்
உலக எரிசக்தி மாநாடு 2024-ல் இந்தியா: எரிசக்தித் துறை செயலாளரும் நெதர்லாந்திற்கான இந்தியத் தூதரும் இந்திய அரங்கைத் திறந்து வைத்தனர்
Posted On:
23 APR 2024 6:06PM by PIB Chennai
நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் 2024 ஏப்ரல் 22 அன்று தொடங்கி 2024 ஏப்ரல் 25 வரை நடைபெறும் 26-வது உலக எரிசக்தி மாநாட்டில் இந்தியா தனது புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் மின் உற்பத்தி நடைமுறைகளை காட்சிப்படுத்துகிறது.
இம்மாநாட்டில் உள்ள இந்திய அரங்கு, புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் மின் உற்பத்தி நடைமுறைகளைக் காண்பிப்பதற்கான மையமாகத் திகழ்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. மின்சார அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் இந்த இந்திய அரங்கில் பங்கேற்று, உலகளாவிய எரிசக்தி மாற்றத்தில் இந்தியாவின் தலைமைக்குக் கூட்டாக சான்றளிக்கின்றன.
இந்த அரங்கை மத்திய மின்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால், நெதர்லாந்திற்கான இந்தியத் தூதர் திருமதி ரீனத் சாந்து ஆகியோர் 2024, ஏப்ரல் 22 அன்று திறந்து வைத்தனர்.
நெதர்லாந்தின் துணைப் பிரதமரும், பருவநிலை மற்றும் எரிசக்திக் கொள்கைக்கான அமைச்சருமான திரு ராப் ஜெட்டன், உலக எரிசக்திக் கௌன்சிலின் பொதுச் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ஏஞ்சலா வில்கின்சன் ஆகியோர் 2024 ஏப்ரல் 22 அன்று உலக எரிசக்தி காங்கிரஸில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கிற்கு வருகை தந்தனர்.
***
AD/SMB/RS/DL
(Release ID: 2018647)
Visitor Counter : 72