சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

'குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை' என்ற தலைப்பிலான மாநாட்டிற்கு சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது

Posted On: 21 APR 2024 8:34PM by PIB Chennai

புதுதில்லி, ஜன்பத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை' என்ற கருப்பொருளில் ஏப்ரல் 20 அன்று ஒரு நாள் மாநாட்டிற்கு சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சட்ட அமலாக்க முகமைகளின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் இதர அதிகாரிகள், சட்ட மாணவர்கள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய நீதித்துறைச் சட்டம் 2023, இந்திய சிவில் பாதுகாப்பு சட்டம் 2023 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் 2023 ஆகிய மூன்று  குற்றவியல் சட்டங்கள் 2024 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு ரவிருப்பதன் பின்னணியில்  இந்த மாநாடு நடத்தப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் டி.ஒய்.சந்திரசூட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் திரு ஆர் வெங்கடரமணி, இந்திய சொலிசிட்டர் ஜெனரல் திரு துஷார் மேத்தா, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் நீதித்துறை செயலாளர் திரு எஸ் கே ஜி ரஹாத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், புதிய இந்திய சிவில் பாதுகாப்பு சட்டம், டிஜிட்டல் யுகத்தில் குற்றங்களைக் கையாள்வதற்கான முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது என்றார். குற்றவியல் விசாரணைகள் மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தச் சட்டம்  நிபந்தனை விதிக்கிறது. இது ஏராளமான நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு காணவும், விரைவாக நீதி வழங்கவும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மூன்று குற்றவியல் சட்டங்களும் நம் காலத்துடன் ஒத்திசைவான விதிகளை உருவாக்கும் அதே வேளையில், இந்த சட்டங்களிலிருந்து முழுமையாக பயனடைய அனைத்து பங்குதாரர்களுக்கும் போதுமான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று தலைமை நீதிபதி மேலும் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. அர்ஜுன் ராம் மேக்வால், குற்றவியல் நீதி அமைப்பில் மாற்றங்கள் தேவை என்பதை  சுட்டிக்காட்டினார். ஆரம்பத்தில் காலனிய ஆட்சியாளர்களின் கண்ணோட்டத்தில் அமல்படுத்தப்பட்ட குற்றவியல் நீதி அமைப்பில் மாற்றங்கள் தேவை என்றும், இந்திய உணர்வு மற்றும் பண்பாடு அதில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

***

SMB/BR/KPG



(Release ID: 2018435) Visitor Counter : 85