புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இதுவரை இல்லாத அளவாக வருடாந்திர நிகர லாபம், 1% க்கும் குறைவான வாராக்கடன்களைப் பதிவு செய்தது ஐ.ஆர்.இ.டி.ஏ

Posted On: 20 APR 2024 3:24PM by PIB Chennai

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நிறுவனத்தின் (ஐஆர்இடிஏ)  நாட்டின் மிகப்பெரிய தூய பசுமை நிதியுதவி நிறுவனமான என்பிஎப்சி அதிக வருடாந்திர லாபமான ரூ. 1252.23 கோடியை எட்டியுள்ளது.  இது முந்தைய நிதியாண்டு 2022-23 ஐ விட 44.83% ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் குறிக்கிறது. நிறுவனம் அதன் நிகர வாராக்கடன் அளவை நிதியாண்டு 2023-24 இல் 0.99% ஆக வெற்றிகரமாக குறைத்துள்ளது, இது நிதியாண்டு 2022-23 இல் 1.66% ஆக இருந்தது, இது ஆண்டுக்கு 40.52% அளவுக்கு குறைப்பதை உறுதி செய்துள்ளது.

ஐஆர்இடிஏ-வின் கடன் 2023 மார்ச் 31 நிலவரப்படி ரூ.47,052.52 கோடியிலிருந்து 26.81% அதிகரித்து, 2024 மார்ச்  31 நிலவரப்படி ரூ.59,698.11 கோடியாக உள்ளது. நிறுவனம் 2023-24 நிதியாண்டில், அதிக வருடாந்திர கடன் ஒப்புதல்கள் ரூ. 37,353.68 கோடி மற்றும் ரூ. 25,089.04 கோடி வழங்கல்களை அடைந்துள்ளது, இது முறையே 14.63% மற்றும் 15.94% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது, முந்தைய ஆண்டில் கடன் ஒப்புதல்கள் ரூ. 32,586.60 கோடி மற்றும் ரூ. 21,639.21 கோடி வழங்கல்களாக இருந்தது. இது நிறுவனத்தின் வரலாற்றில் மிக உயர்ந்த வருடாந்திர கடன் வழங்கல் மற்றும் ஒப்புதலைக் குறிக்கிறது.

நிறுவனத்தின் நிகர மதிப்பு 44.22% அதிகரித்துள்ளது, 2024 மார்ச் 31 நிலவரப்படி ரூ. 8,559.43 கோடியை எட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டில் மார்ச் 31, ரூ. 5,935.17 கோடியாக இருந்தது.

2023-24 நிதியாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை அறிவிக்கும் சந்தர்ப்பத்தில், ஐஆர்இடிஏ-வின் இயக்குநர்கள் குழு ஏப்ரல் 19, 2024 அன்று நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் நிலையான வளர்ச்சியைப் பாராட்டியது.

சிறப்பான  நிதி முடிவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஐஆர்இடிஏ-வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ், இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதில் ஐஆர்இடிஏவின்  உறுதிப்பாட்டை வலியுறுத்தினார், இது முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய பாதையைக் குறிக்கிறது.

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதன் பங்குதாரர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவே காரணம் என்று கூறினார்.  புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் இயக்குநர்கள் குழுவுக்கு அவர்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்த அவர்ஐ.ஆர்.இ.டி.ஏ. குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும்  முயற்சிகளுக்காக  பாராட்டு தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் :  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2018321

 

***

AD/PKV/DL



(Release ID: 2018333) Visitor Counter : 59