மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

11 பேர் கொண்ட இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தேர்தலை மத்திய அரசு அறிவித்துள்ளது

Posted On: 20 APR 2024 2:01PM by PIB Chennai

இந்திய கால்நடை கவுன்சில் சட்டம், 1984 (1984 இன் 52) இன் பிரிவு 3 இன் உட்பிரிவு (ஜி) உடன், இந்திய கால்நடை கவுன்சில் விதிகள், 1985 இன் விதிகள் 10 மற்றும் 11 இன் படி, இந்திய கால்நடை கவுன்சிலின் 11 உறுப்பினர்களின் தேர்தலை 25 அக்டோபர் 2023 -வது தேதியிட்ட எஸ்.ஓ 4701 (இ) அறிவிக்கையின் மூலம் மத்திய அரசு அறிவித்தது.  தற்போது, தில்லி உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், இந்திய கால்நடை கவுன்சிலின் இந்திய கால்நடை மருத்துவர்கள் பதிவேட்டில் பதிவு செய்துள்ள நபர்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் தேதிகளை நிர்ணயித்துள்ளார்:

 

நிகழ்வு

தேதியும் நேரமும்

வேட்பு மனு தாக்கல்  செய்யும் நாள்

20.04.2024 (சனிக்கிழமை) முதல் 26.04.2024 வரை (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் தேதி மற்றும் நேரம்

 

01.05.2024 (புதன்கிழமை)காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

 

வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள்

03.05.2024  (வெள்ளி) மாலை 5.00 மணி வரை

வாக்கெடுப்புத் தேதி

08.06.2024 (சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை)

வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவிக்கும் நாள், நேரம் மற்றும் இடம்

09.06.2024 (ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல்) புது தில்லி

 

 

தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி நீதியரசர் (திருமதி) ஆஷா மேனன் (ஓய்வு), கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைக்கான தேர்தல் அதிகாரி, கேபின் எண் 5, சந்திரா லோக் கட்டிடம் (2வதுதளம்), ஜன்பத் சாலை, புது தில்லி, என்ற முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தங்கள் வேட்புமனுவை அனுப்பலாம் அல்லது நேரில் வழங்கலாம்.

 

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் வேட்பு மனுக்களை ஆன்லைனில் (வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர் / வழிமொழிபவரின் தெளிவான கையொப்பம் கொண்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியில் மாலை 5.00 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மின்னஞ்சல் ஐடி: ro.vcielection[at]gmail[dot]com இல் சமர்ப்பிக்கலாம். 26.04.2024 மாலை 5.00 மணிக்குப் பிறகு வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 

***

AD/PKV/DL



(Release ID: 2018329) Visitor Counter : 98