குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இடுகை இடப்பட்ட நாள்:
16 APR 2024 6:28PM by PIB Chennai
ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் ராமரின் வாழ்க்கை நீதி, ஒருமைப்பாடு மற்றும் சகிப்புத்தன்மைக்கு காலத்தால் அழியாத உதாரணமாக விளங்குகிறது. அவரது கொள்கைகள் பலருக்குப் பல யுகங்களாக வழிகாட்டியுள்ளன; நல்லொழுக்க வாழ்க்கையை நடத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. இன்று ராமபிரான் ஏற்றுக்கொண்ட நிலைபேறுடைய மாண்புகளை நாம் சிந்தித்து, அவர் காட்டிய பாதையில் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்.
வளமான மற்றும் வலுவான பாரதத்தை உருவாக்க நாம் உறுதியுடன் பணியாற்றும் அதே வேளையில், ஸ்ரீ ராம பிரானின் நிலைபேறுடைய கொள்கைகளால் நமது வாழ்க்கை வழிநடத்தப்படட்டும்.
---
ANU/AD/SMB/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2018072)
வருகையாளர் எண்ணிக்கை : 90