பாதுகாப்பு அமைச்சகம்
கார்வாருக்கு அப்பால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீன்பிடிப் படகை இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டது
Posted On:
16 APR 2024 4:21PM by PIB Chennai
கர்நாடகாவின் கார்வாரில் இருந்து சுமார் 215 கடல் மைல் தொலைவில் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட இந்திய மீன்பிடி படகு ரோசரியை இந்தியக் கடலோரக் காவல்படை 2024, ஏப்ரல் 16 அன்று வெற்றிகரமாக மீட்டது. இந்தப் படகு ஏப்ரல் 13, அன்று விடுத்த அபயக்குரலுக்கு இந்தியக் கடலோரக் காவல்படை கப்பலான சாவித்ரிபாய் ஃபுலே விரைந்து பதிலளித்தது. பாதகமான கடல் நிலைமைகளுக்கு இடையே படகுடன் தொடர்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, படகின் இயந்திரத்தை சரிசெய்ய முயற்சிகளை மேற்கொண்டது. பின்னர், மீன்வளத் துறையின் மாவட்ட தலைமையகத்தின் உதவியுடன், மீன்பிடி படகினைக் கார்வாரை நோக்கி கடலோரக் காவல்படைக் கப்பல் இழுத்துச் சென்று மற்றொரு மீன் பிடி படகான ஸ்ரீ லக்ஷ்மி நாராயணிடம் ஒப்படைத்தது. அது ரோசரி படகை பாதுகாப்பாக கார்வார் துறைமுகத்திற்கு கொண்டு சென்றது.
-----
(Release ID: 2018032)
ANU/AD/SMB/KPG/RR
(Release ID: 2018040)
Visitor Counter : 106