குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பைசாகி, மேஷாதி, வைஷாகாடி, புத்தாண்டு, விஷு, நபா பர்ஷா மற்றும் போஹாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு குடியரசு துணைத்தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
12 APR 2024 7:34PM by PIB Chennai
பைசாகி, மேஷாதி, வைஷாகாடி, புத்தாண்டு, விஷு, நபா பர்ஷா மற்றும் போஹாக் பிஹு ஆகிய பண்டிகைகளையொட்டி குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இந்த மகிழ்ச்சியான தருணத்தில், நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடு முழுவதும் தனித்துவமான பெயர்கள் மற்றும் பாரம்பரியத்துடன் கொண்டாடப்படும் இந்த திருவிழாக்கள், நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துரைக்கின்றன. வளமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் புதிய உணர்வையும் நம்பிக்கையையும் இவை எதிரொலிக்கின்றன. புதிய தொடக்கத்தின் மகிழ்ச்சியை நாம் கொண்டாடும் போது, பாரதத்தின் நாகரீக நெறிமுறையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை உறுதி செய்ய நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம்.
இந்த சிறப்பான தருணம் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவைக் கொண்டுவரட்டும்” இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் குடியரசு துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
***
ANU/AD/PLM/KPG/DL
(Release ID: 2017798)