குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஈத் உல் பிதுர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
10 APR 2024 4:41PM by PIB Chennai
ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
ஈத் உல் பிதுர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
புனித ரமலான் மாதத்தின் நிறைவாக கொண்டாடப்படும் ஈத்-உல்-பிதுர் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது நன்றியுணர்வு மற்றும் ஒற்றுமை உணர்வைக் குறிக்கிறது. இந்தப் பண்டிகையின் முக்கிய அம்சமாக திகழும் இரக்கம், தாராள மனப்பான்மை, ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்புகளை இது நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் நமது பன்முகத்தன்மை கொண்ட தேசத்தின் நெறிமுறைகளுடன் இது எதிரொலிக்கிறது.
இந்த ஈத் பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, நிறைவு மற்றும் ஏராளமான ஆசீர்வாதங்களைக் கொண்டு வரட்டும்.
***
PKV/RR/KV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2017610)
வருகையாளர் எண்ணிக்கை : 121