புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை அரசு நீட்டித்துள்ளது

Posted On: 09 APR 2024 7:06PM by PIB Chennai

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது .

2024, மார்ச் 15 அன்று வெளியிடப்பட்ட திட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளபடி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம் 2025-26 நிதியாண்டு வரை மொத்தம் ரூ.400 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேமிப்புபோக்குவரத்து மற்றும் பயன்பாடு உட்பட பசுமை ஹைட்ரஜன் மதிப்புத் தொடரின் அனைத்துக் கூறுகளையும் இது உள்ளடக்கியது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் இலக்கு சார்ந்ததாகவும், காலவரையறைக்கு உட்டதாகவும், அளவிடுவதற்கு ஏற்றதாகவும் இருக்கும். தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டார்ட் அப், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாட்டில் பணியாற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்படும்.

வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 2024 மார்ச் 16 அன்று முன்மொழிவுகளுக்கான அழைப்பை வெளியிட்டது. இதற்கு ஊக்கமளிக்கும் வகையில் வரவேற்பு இருந்ததைக் கருத்தில் கொண்டும், நல்ல தரமான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க நிறுவனங்களுக்கு போதுமான நேரத்தை அனுமதிக்கவும், முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை 2024, ஏப்ரல் 27  வரை அமைச்சகம் நீட்டித்துள்ளது.

----

ANU/SRI/SMB/KPG/DL



(Release ID: 2017566) Visitor Counter : 57


Read this release in: English , Urdu , Hindi , Punjabi